விளையாட்டுத் துறையில் அரசின் தலையீடு : இரான் டிவிட்டர்வாசிகள் கடும் எதிர்ப்பு

0
88

இரான் டிவிட்டர் பயனாளிள் விளையாட்டுத் துறையில் அரசின் தலையீடுஅதிகமாக இருப்பதை எதிர்த்து டிவிட்டரில் பதிவுவிட்டு வருகின்றனர். தங்கள் நாட்டின்விளையாட்டு அமைப்புகளை சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், #BanIRSportsFederationsஎன்ற ஹேஷ்டேக்பல்லாயிரக் கணக்கில் அவர்களால் பகிரப்பட்டு வருகிறது.

2018ஆம் ஆண்டு நடந்த ஒரு கால்பந்து போட்டியின்போது, பெண்கள் விளையாட்டு மைதானத்துக்குள் நுழையவே அனுமதி இல்லாத சூழலில், ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் சென்ற 29 வயது பெண் ஒருவரின் சிறைக் காவலை தலைநகர் டெஹ்ரானில் உள்ள நீதிமன்றம் நீட்டித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து அப்பெண் அந்த நீதிமன்றத்தின் முன் தீக்குளித்தார். உடனடியாக காப்பாற்றப்பட்ட அவர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே போல சயீத் மொல்லோய் எனும் ஜூடோ விளையாட்டு வீரர் இஸ்ரேல் வீரரை 2019 ஜூடோ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்கொள்வதைத் தடுக்க, அதற்கு முன் அவர் ரஷ்ய வீரருடன் மோதவிருந்த போட்டியில் இருந்து விலகுமாறு அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினர்.

இரான் அரசு சர்வதேச அளவிலான போட்டிகளில் இஸ்ரேல் வீரர்களுடன் இரான் வீரர்கள் மோதுவதை தடுத்து வருகிறது.

இதனால், தங்கள் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் தங்கள் நாட்டின் விளையாட்டு அமைப்புகளை தடை செய்ய இரான் டிவிட்டர்வாசிகள் கோருகின்றனர்.