2014-18ஆம் ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட்டுள்ளது.

2014-18ஆம் ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு எவ்வளவு செலவிட்டது என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியபோது , மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அந்த பதிலில் எலெக்ட்ரானிக், அச்சு மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக கடந்த 2014-18ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அளிக்கப்பட்ட விளம்பரங்களுக்கு மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட்டுள்ளது.

2014-15ஆம் ஆண்டில் ரூ.979.78 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2015-16ஆம் ஆண்டில் ரூ.1,160.16 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2016-17ஆம் ஆண்டில் 1,264 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2017-18ஆம் ஆண்டில் ரூ.1,313 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2018-19ஆம் நிதியாண்டில் இதுவரையில் ரூ.162.83 கோடி விளம்பரங்களுக்காக அரசு செலவிட்டுள்ளது.

அச்சு விளம்பரங்களுக்கு ரூ.2,128.33 கோடியும், குரல் ஒளிபரப்பு ஊடக விளம்பரங்களுக்கு ரூ.2,131 கோடியும், பிற விளம்பரங்களுக்கு ரூ.620.70 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று ரத்தோர் குறிப்பிட்டுள்ளார்.

Courtesy : Hindustan Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here