விளம்பரங்களில் மட்டும் பாஜக ஆட்சியின் வளர்ச்சியைப் பற்றி கதைகள் ; ஏழை மக்களுக்கு என்ன செய்தீர்கள் மோடிஜீ; பாஜகவை விளாசிய பிரியங்கா காந்தி

0
216

பாஜக அரசு  விளம்பரங்கள் வெளியிடுவதில் சாதனை செய்கிறது , டிவியிலிருந்து , ரயில் வரைக்கும் அவர்களின் விளம்பரங்களை பார்க்கலாம் . முதற் கட்ட வாக்குபதிவின்போது அவர்கள் அளித்த உணவு பொட்டலங்களில்கூட பாஜகவின் விளம்பரங்கள்தான் . இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள் மோடிஜி என உத்தரப் பிரதேச பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் சிக்ரியில் காங்கிரஸ் வேட்பாளார் ராஜ் பப்பாரை ஆதரித்து திங்கள்கிழமை பிரச்சாரம் செய்தார்  பிரியங்கா. அப்போது அவர் பேசியதாவது 

பாரதி ஜனதா கட்சி உண்மையிலேயே தேசியவாத கொள்கை கொண்டிருந்தால் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய சுதந்திர போராட்டத் தியாகிகளை அவமதிக்காமல் இருக்கட்டும். தேசத்துக்காக உயிர் நீத்த வீரர்கள் இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் ஒரே அளவில் மரியாதை செய்ய வேண்டும்.

பாஜகவினர் நீங்கள் தேசியவாதி என்றால் பாகிஸ்தானை எப்போதும் விமர்சிப்பதை விடுத்து இந்தியாவுக்காக இங்குள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக என்ன செய்தது என்ன செய்யவுள்ளது என்பதைப் பற்றி பேசட்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரண்ட விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாகச் சென்றனர். வெறுங் கால்களுடன் பேரணியாக வந்த அவர்கள் கோரிக்கைக்கு எப்போதாவது இந்த அரசு செவி சாய்த்ததா? இந்த அரசு தேசியவாத அரசு என்றால் ஏன் இங்கு மதங்களின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. மதவெறிக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவு செல்லாமல் கொலையாளிகளை ஏன் அரசாங்கம் கவுரவித்தது.

இந்த அரசாங்கம் அதன் ஜனநாயகத்தின் மாண்பை நினைத்து பெருமைப்படவும் இல்லை நம் தேசத்தின் மக்களை நினைத்தும் பெருமைப்படவில்லை. இது உண்மையான தேசியவாதமாக இருந்திருந்தால் உண்மையில் வழியல்லவா சென்றிருக்கும்.

நான் இந்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கின்றனர். விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒரு விவசாயி அவர் விளைவித்த பொருள் வெறும் 490 ரூபாய்க்கு விலைக்கு போனதால் அந்த ரூபாயை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். யாராவது எதிர்த்து கேள்விகள் கேட்டாலே அவர்களை தேச விரோதி என்று முத்திரைக் குத்தி விடுகின்றனர் பாஜகவினர் . 

இவ்வாறு பிரியங்கா பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here