விளக்கம் அளியுங்கள்: சிஏஏ.,வுக்கு எதிரான மனு; மத்திய அரசுக்கு ‘நோட்டீஸ்’

The Supreme Court Thursday sought response of the Centre on a batch of fresh pleas challenging the constitutional validity of the Citizenship (Amendment) Act, filed by 15 petitioners including Kerala Nadvathul Mujahideen, Anjuman Trust and Dakshin Kerala Jameeyathul Ulema.

0
417

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுக்கள் மீது, விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம், கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக 150க்கும் மேற்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளா நடுவாத்துல் முஜாகிதீன், அஞ்சுமான் அறக்கட்டளை, கேரளா ஜமீயாதுல் உலேமா உட்பட மேலும், 15 அமைப்புகள் மனு தாக்கல் செய்துள்ளன.

இந்த மனுக்கள், நேற்று(வியாழக்கிழமை) தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே அனுப்பப்பட்ட மனுக்களுடன் புதிய மனுவையும் சேர்த்து, அதன் மீது விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியது. இந்த மனுக்கள், அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here