போகோ எஃப்1(20,790) டிசம்.6லிருந்து 8ஆம் தேதி வரை ரூ.5000 தள்ளுபடியில் விற்பனை ஆக உள்ளது. இந்த பிரத்தியோகமான தள்ளுபடியினை பிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ இணையதளத்தில் பெறலாம். சியோமி குவால்கம்

ஸ்நாப்டிராகன் 845SoCல் இயங்கும் போகோ எஃப்1-னினை கடந்த டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் விலை ரூ.20,999 ஆகும்.
இது, 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜில் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்-ல் கிடைக்கிறது.

இன்று போகோ இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் டிசம்பர் 6லிருந்து 8வரை போகோ எஃப்1-ன் விலையில் ரூ.5000 தள்ளுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதை உறுதி செய்துள்ளது. மேற்கொண்டு இந்த தள்ளுபடி குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
சியோமி போகோ எஃப்1ன் விலை

6ஜிபி ரேம்/ 64ஜிபி உள்கட்ட சேமிப்பினைக் கொண்ட சியோமி போகோ எஃப்1-ன் விலை ரூ. 20,999 ஆகும். 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.28,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன், ரோசோ ரெட், ஸ்டீல் புளூ, மற்றும் கிராஃபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. போகோ எஃப்1ன் ரியல் கேவ்லார் எடிஷனானது ரூ. 29,999.சியோமி போகோ எஃப்1-ன் முக்கியம்சங்கள் டூயல் சிம் கொண்ட சியோமி எஃப்1 MIUI 9.6ல் ஆன்ட்ராய்டு 8.1ல் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 6.18 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே மற்றும் 2.5டி வளைந்த கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 SoC 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேமினைக் கொண்டுள்ளது. 12மெகா பிக்சல் சோனி IMX 363 பிரைமரி சென்சார், 5மெகா பிக்சல் செகண்டரி சென்சாரினைக் கொண்டுள்ளது.

போகோ எஃப்1 ஆனது 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி ஸ்டோரேஜினைக் கொண்டுள்ளது மேலும் 256ஜிபி சேமிக்கும் திறன் கொண்ட மைக்ரோSD கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் 18w அதி வேகமாக சார்ஜ் ஏறும் திறன் கொண்ட 4000mAh பேட்டரியினை பெற்றுள்ளது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here