நோக்கியா 6.1ஸ்மார்ட்போனின் தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நோக்கியா 6.1 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி ரேம்,   32 ஜி.பி மெமரி மற்றும் 4 ஜி.பி ரேம்,   64 ஜி.பி மெமரி என இரண்டு வெரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் பை இயங்குதளம், 5.5-இன்ச் FHD+ தொடு திரை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன்  630 எஸ் ஓ சி ப்ராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.  

3,000mAh பேட்டரியையும், USB டைப்-C சார்ஜிங் போர்ட், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v5.0, 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவயை இந்த ஸ்மார்ட்போனில் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.6,999க்கு விற்பனையாகவுள்ளது.  

இந்த குறைக்கப்பட்ட விலையுடன் நோக்கியா 6.1 தளத்தில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.8,999க்கு விற்கப்பட்ட   3 ஜி.பிரேம், 32 ஜி.பி மெமரி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.6,999க்கு கிடைக்கிறது. அதேபோல் ரூ.10,999க்கு விற்கப்பட்ட  4 ஜி.பி ரேம், 64 ஜி.பிமெமரி ஸ்மார்ட்போன் ரூ.9,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் சென்ற ஆண்டு ரூ.16,999 துவக்க விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here