???????????????????????????????

???????????????????????????????

(ஆகஸ்ட் முதல் தேதி – 2016 – வெளியான கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.)

தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் ஜூலை 13ஆம் தேதியும் ஜூலை 31ஆம் தேதியும் வெளியான செய்திகள் இங்கு படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன; ஜூலை 13ஆம் தேதி வெளியான செய்தி, எழுத்தாளர் விலாசினி ரமணியின் முகநூல் பதிவையொட்டி எழுதப்பட்டது; ஜூலை 31ஆம் தேதியன்று வெளியான இந்தச் செய்தி ரமணியை மிரட்டியதாகச் சொல்லப்படும் கார் ஓட்டுநரிடம் பேசி எழுதப்பட்டிருக்கிறது. இது ஊடகவியலில் உண்மையின் பல்வேறு பக்கங்களையும் பிரதிபலிக்கும் தன்மை என்று சொல்லப்படுகிறது; இதற்காக தி ஹிந்துவைப் பாராட்ட வேண்டும்; ஆனால் இதே செய்தி, சமூக வலைத்தளங்களில் செய்தியாளர்களுக்குக் காத்திருக்கும் புதைகுழிகளையும் அடையாளம் காட்டுகிறது. சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்கான அடிப்படைத் தரவுகளைத் தரவல்லவை; அதற்கு மேல் ஊடகவியலாளர்களுக்குச் சில வேலைகள் உண்டு.

ஜூலை 9ஆம் தேதி இரவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது; இந்தச் சம்பவத்தில் செய்தியாளர், பாதிக்கப்பட்ட பெண்ணிடமே கார் ஓட்டுநரின் எண்ணைப் பெற்று நடந்த சம்பவம் பற்றிக் கேட்டறிந்திருக்க வாய்ப்பும் அவகாசமும் இருந்திருக்கிறது; சில சமயங்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்திகளைத் தடுத்துவிட முடியும் என்ற அவசரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது பாதிப்பை உண்டாக்கியவர்கள்/அக்கிரமக்காரர்களிடம் பேசாமல் செய்தி வெளியிடும் மரபும் இருக்கிறது; ஆனால் இந்தப் பிரச்சினையில் தவறிழைத்ததாக கருதி கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநரின் கைப்பேசி இலக்கம் பாதிக்கப்பட்டவர்களிடமே இருந்திருக்கிறது.

செய்தி வெளியான பிறகே கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்; பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் வாய்ப்பும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுவதற்கு ஊடகவியலில் இடமிருக்கிறது. குற்றமிழைத்தவரைச் சீர்திருத்துவதும் பெண்களுக்குப் பாதுகாப்பான உலகத்தை உறுதி செய்வதற்கு அவசியமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here