இந்த உலகத்தை பல்வேறு விலங்குகளின் பார்வையில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? இத்தகைய புது அனுபவத்தை மனிதர்களுக்குத் தருவதற்காக புதிய சாஃப்ட்வேர் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் எக்ஸ்டெர் பல்கலைக்கழகம் இணைந்து இப்புதிய சாப்ஃட்வேரை உருவாக்கியுள்ளனர். பல்வேறு வகையான விலங்குகளின் பார்வையில் இந்த உலகை மனிதர்களால் இதன் மூலம் காண முடியும் எனக் கூறப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விலங்கியல் ஆய்வாளர்களுக்கு தற்போதைய சூழலில் இந்த சாஃப்ட்வேர் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சாஃப்ட்வேர் நிச்சயமாக ஒரு இன்ஸ்டாகிரம் ஃபில்டர் போல் இருக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

’வெவ்வேறு மிருகங்களுக்கும் வெவ்வேறு விதமான பார்வை நோக்கு, நிற மாறுபாடு இருக்கும். இதனது இயற்கை பரிணாமத்தை மனிதனும் உணர வேண்டும் என இந்த சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையின் மூலம் விலங்குகளில் குண நலன்கள் நிர்ணயிக்கப்படுகிறது. இதுகுறித்த ஆராய்ச்சிகளுக்கும் இந்த சாஃப்ட்வேர் உதவும்’ என ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here