இந்தியாவில் வரும் ஜன.29ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன்.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுமையாக வரும் ஜன.22ஆம் தேதி ஹானர் வியூ 20 அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஹோல் பன்ச் செல்பி கேமரா போனின் இடதுபுறம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பானது கிளாஸி கிரேடியண்ட் பினிஷிங் கொண்டுள்ளது. இதனுடன் டூயல் கேமரா செட்டப், கைரேகை சென்சாரும் உள்ளது.

ஹானர் வியூ 20 சிறப்பம்சங்கள் :

ஆண்ட்ராய்டு 9.0 பை, டூயல் சிம் கொண்டது ஹானர் வியூ 20. 6.4 இன்ச் புல் எச்டி + (1080×2310 பிக்செல்ஸ்) டிஎப்டி டிஸ்பிளே 19.5:9 அக்செப்ட் ரேசியோ, 16.7 மில்லியன் கலர்கள் கொண்ட தொடு திரை வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஆக்டோ கோர் ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸருடன் 8ஜிபி மற்றும் 6ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் 128ஜிபி மற்றும் 256ஜிபி மெமரியுடன் வருகிறது. இதில் மெமரி கார்டு சப்போர்ட் கிடையாது.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனில், 48 மெகா பிக்ஸெல்ஸ் கேமரா, சோனி IMX586 சென்சாருடன் f/1.8 அப்பர்சர்(aperture), 960fps ஸ்லோ மோஷன் வீடியோ ரெகார்டிங் சப்போர்ட், எச்டிஆர், எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. முன்பக்கம் 25 மெகா பிக்ஸெல்ஸ் கேமரா சென்சார் கொண்டுள்ளது.

விலை விபரம் :

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனினும் சீன சந்தையில் ஹானர் v20 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட போனின் விலையானது CNY 2,999 (இந்தியாவில் ரூ.30,400) ஆகும். 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட போனின் விலையானது CNY 3,499 (ரூ.35,500) ஆகும்.

இதில் 8ஜிபி ரேம், 256ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 3,999 (ரூ.40,600) ஆகும். இந்த போன் ப்ளூ, ரெட், மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

இந்த போன் ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் ஜன.29முதல் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்னில் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் பிரத்தியோகமாக விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இதன் விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்போது 10க்கும் மேற்பட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here