கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இது லாக்டவுன் காரணமாக விற்பனைக்கு வருவதில் தாமதம் ஆனது. இப்போது மீண்டும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.


ரெட்மி நோட் 9 ப்ரோ

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸில் 4 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல 6ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை 16,999 ரூபாயாக உள்ளது. இந்த போன் வெள்ளை, கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும். இன்று மதியம் 12 மணி முதல் அமேசான் மற்றும் எம்ஐ.காம் இணையத்தில் இந்த போனை ஆர்டர் செய்யலாம்.

சிறப்பம்சம்

டூயல் சிம் வசதி கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ ஆண்ட்ராய்ட் 10-ல் இயங்குகிறது. இது 6.67 இன்ச் டிஸ்பிளேவுடன், ஐபிஎஸ் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இதில் 720 கி சிப்செட், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை புஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் 4 கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சென்சார் கேமரா உள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோவில் 18 வால்ட் ஃபாஸ் சார்ஜிங் வசதியுடன் 5,020 எம் ஏ எச் பேட்டரியைக் கொடுள்ளது. இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், Mi.com, Amazon.com ஆகிய ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here