புதிய ஹூண்டாய் க்ரெட்டா(Hyundai Creta)கார் E, E+, S, SX, SX[Dual Tone] மற்றும் SX[O] ஆகிய 6 வேரியண்ட்டுகளில் 7 வண்ணங்களில் கிடைக்கும். இரண்டு இரட்டை வண்ணக் கலவையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
Creta6
புதிய ஹூண்டாய் க்ரெட்டா(Hyundai Creta) காரின் முகப்பு க்ரில், பம்பர் மற்றும் ஹெட்லைட் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ரூஃப் ரெயில், அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டரும் உட்புறத்தில் புதிய ஃபேப்ரிக் இருக்கைகள், ஆரஞ்ச் வண்ண பாகங்கள் மற்றும் புதிய ஏசி வென்ட்டுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
Creta11
புதிய ஹூண்டாய் க்ரெட்டா(Hyundai Creta) காரில் பழைய மாடலில் இருந்த அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன.பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள். 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகைகளில் கிடைக்கும்.
Creta7
புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் மிரர் லிங்க் தொழில்நுட்ப வசதிகளை சப்போர்ட் செய்யும்.

கையில் கட்டிக் கொள்வதற்கான கீ பேண்ட் என்ற சாவி வழங்கப்படுகிறது. இந்த சாவி மூலமாக புஷ் பட்டன் மூலமாக காரை ஸ்டார்ட் செய்யவும், எஞ்சினை ஆஃப் செய்யவும் மேலும், இந்த கீ பேண்ட் மூலமாக வாடிக்கையாளர் எவ்வளவு தூரம் நடக்கிறார் என்பதையும் அதன் மூலமாக செலவாகும் கலோரி அளவை காட்டும் வசதி சேர்க்கப்ப்டடு இருக்கிறது.
Creta12
க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்,ஸ்மார்ட் சன்ரூஃப்,வயர்லெஸ் சார்ஜர்,பை-பங்க்ஷனல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள்,புதிய 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள்ளும் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகளும்,ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாகவும் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றுள்ளன.
Creta5
புதிய ஹூண்டாய் க்ரெட்டா(Hyundai Creta)கார் வெள்ளை, கருப்பு, சில்வர், சிவப்பு, சாம்பல், ஆரஞ்ச் மற்றும் நீல வண்ணங்களில் வந்துள்ளது. கருப்பு- வெள்ளை மற்றும் கருப்பு- ஆரஞ்ச் ஆகிய இரண்டு இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கும்.
Creta4
புதிய ஹூண்டாய் க்ரெட்டா(Hyundai Creta) கார் ரூ.9.44 லட்சம் ஆரம்ப விலையிலும் டாப் வேரியண்ட் ரூ.15.03 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்