விரைவில் வெளிவரும் ஹூவாவே 5ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

0
154
2020 ஆம் ஆண்டில் ஹூவாவே நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது.
தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு $300 க்கும் அதிகமாக (சுமார் ரூ. 21,000) விற்கப்படுகிறது. இருப்பினும், இந்த
ஸ்மார்ட்போன்களின் விலையை $150 (சுமார் ரூ. 10,500) அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர ஹூவாவே திட்டமிட்டுள்ளது.

தற்போது, ​​பெரும்பாலான 5ஜி கைபேசிகள் $400 க்கும் அதிகமாக (சுமார் ரூ. 28,500) விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், 5ஜி ஸ்மார்ட்போனை 2020 கடைசியிலோ அல்லது 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில் விற்பனைக்குக் கொண்டு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூவாவே மேட்30 5ஜி மற்றும் மேட்30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களில் 1 மில்லியன் யூனிட்களை ஒரே நிமிடத்தில் நிறுவனம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here