ரியல்மி நிறுவனம், ரியல்மி எக்ஸ்டிஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

4ஜிபி மற்றும் 64ஜிபி, 6ஜிபி மற்றும் 64ஜிபி, மற்றும் 8ஜிபி மற்றும் 128ஜிபி என மூன்று வெரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளன. 

ரியல்மிஎக்ஸ்டி(#realmeXT)ஸ்மார்ட்போன்ஆக்டா-கோர்குவால்காம்ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சிப்ராசஸருடன் இந்த  ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.  வாட்டர்-ட்ராப் நாட்ச் முன் புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் அமோல்ட்திரை  இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது

இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ்ஓசி ப்ராசஸர்,ஆண்ட்ராய்ட் 9 பையை மையப்படுத்திகலர்ஓ.எஸ் 6 அமைப்பைக் கொண்டு இயங்குகிறது.

இந்த ரியல்மி எக்ஸ் டிஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்
டது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல்வைட்-ஆங்கிள்கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. மேலும், முன்புறத்தில் 16 மெகா பிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதோடு, 4,000எம்.ஏ.ஹெச். பேட்டரி, 20டபுள்யூ, விஓஓசி 3.0 விரைவு சார்ஜிங் வசதி இந்த ஸ்மார்ட்போ
னில் வழங்கப்பட்டுள்ளது. டைப்-சிசார்ஜர் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. 

இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன்விலை இது வரை அறிவிக்கப்படவில்லை.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4 பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் ரெட்மிநோட் 8 புரோஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட விலையிலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன்கள்  நீல நிறத்தில் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்திலும் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.