அசத்தல் அம்சங்களுடன் உருவாகி இருக்கும் ரெட்மி நோட் 11 சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 11 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ மாடல்கள் அக்டோபர் 28 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான டீசர்களையும் சியோமி வெளியிட்டு உள்ளது.

டீசரின்படி புதிய ஸ்மார்ட்போன் மேட் பினிஷ் செய்யப்பட்ட பிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஐ.ஆர். சென்சார், இரண்டாவது ஸ்பீக்கர் வெண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமராக்கள், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, சற்றே வளைந்த திரை, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.


ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலில் 67 வாட் சார்ஜர் வழங்கப்படும் என தெரிகிறது. சீன சந்தையில் புதிய ரெட்மி நோட் சீரிஸ் விற்பனை நவம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here