நோக்கியா நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஒற்றை நிறத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. டேப்லெட் மாடலுக்கான டீசர் நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

டீசரில் நோக்கியா டேப்லெட் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த டேப்லெட் நோக்கியா டி20 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இத்துடன் மெல்லிய பிரேம், டார்க் பினிஷ் கொண்டிருக்கும் என தெரிகிறது.

முன்னதாக இந்த டேப்லெட் விவரங்கள் மற்றும் விலை இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி நோக்கியா டி20 வைபை விலை ஜி.பி.பி. 185 இந்திய மதிப்பில் ரூ. 18,600 என்றும் வைபை மற்றும் செல்லுலார் விலை ஜி.பி.பி. 202 இந்திய மதிப்பில் ரூ. 20,300 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.


அம்சங்களை பொருத்தவரை நோக்கியா டி20 மாடலில் 10.36 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்றும் இது புளூ நிறத்தில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here