அஜித், விஜய் படத்தை இயக்குவதுதான் கோடம்பாக்கத்தின் பென்ச் மார்க்காக உள்ளது. இது ஏற்கனவே அவர்களை இயக்கியவர்களுக்கும் பொருந்தும்.

மோகன்ராஜா விஜய் நடிப்பில் வேலாயுதம் என்ற படத்தை ஏற்கனவே இயக்கியுள்ளார். மீண்டும் விஜய்யுடன் இணைவது குறித்து மோகன்ராஜா பலமுறை பேசியிருக்கிறார், விஜய்யை நேரில் சந்தித்திருக்கிறார். ஆனால், எதையும் அவர் உறுதியாக சொன்னதில்லை.

சமீபத்தில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், விரைவில் விஜய்யுடன் இணைந்து ஒரு படம் செய்யவிருப்பதாக பலத்த கரகோஷத்துக்கிடையில் தெரிவித்தார். அவரே கூறியிருப்பதால் நம்பலாம்.

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தையும் மோகன்ராஜா இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here