முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்ததாக அதிவேக பிராட்பேண்ட் சேவையில் இறங்குகிறது.

நாடு முழுவதும் ஜியோ நிறுவனத்துக்கு 21.50 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஜியோ போனுக்கு 2.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி 1,100 நகரங்களில், வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் அதிவேகமாக இன்டர்நெட் சேவையை வழங்கும் பிராட்பேண்ட் சேவையை ஒரே நேரத்தில் ஜியோ நிறுவனம் தொடங்குகிறது. இந்த சேவையில் அல்ட்ரா ஹைடெபஷினல் தொலைக்காட்சி, குரல் உதவி, விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டு, டிஜிட்டல் ஷாப்பிங் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும். இதற்கு ஜியோ ஜிகாபைர் சர்வீஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஜியோ போன்2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபைல் போனில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூ டியூப் போன்றவசதிகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஜியோபோன் வைத்திருப்பவர்கள், வரும் 21-ம் தேதி முதல் ஜியோ விற்பனை நிலையங்களில் ரூ.501 செலுத்தி புதிய செல்போனை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஜியோபோன் ஹங்காமா மான்சூன் ஆஃபர் வரும் 21-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதிதாக ஜியோ போன் வாங்குபவர்கள் ரூ.2999 செலுத்தி வாங்க முடியும்.

அடுத்ததாக ஜியோ நிறுவனம் வீடுகள், கடைகளில், சிறு, குறு வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்கக்கூடிய அதிவேகம் கொண்ட பைபர் இன்டர்நெட்டை அறிமுகப்படுத்துகிறது.

ஜியோ ஜிகாபைர் சேவைக்கான விண்ணப்பம் முன்பதிவு அனைத்தும் ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து தொடங்கும். மைஜியோ ஆப்ஸ் அல்லது ஜியோ.காம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

இந்த அதிவேக பிராட்பேண்ட் இணைப்புக்குத் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையாக ரூ.4500 செலுத்த வேண்டும். மாதத்துக்கு 100 ஜிபிடேட்டா, 90 நாட்களுக்கு,100எம்பிபிஎஸ் வேகத்தில் இணைப்பு கிடைக்கும். இணைப்பு தேவையில்லை என்று கூறும்போது, வைப்புத்தொகை திரும்ப அளிக்கப்படும்.

செப்டாப் பாக்ஸ் போன்றவை பொருத்தும் போது, அதற்கான கட்டணமின்றி பொருத்தித் தரப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. அப்போது, நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றுப் பேசும் போது இந்தப் புதிய சேவைகளை அறிமுகப் படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here