விரைவில் மின்னணு கடவுச்சீட்டு: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

0
303

மின்னணு முறையிலான கடவுச்சீட்டுகளை (இ-பாஸ்போர்ட்) அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர், வியாழக்கிழமை அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

சிப் பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டுகளை முதல்கட்டமாக 2.2 கோடி பேருக்கு வழக்க வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. டிஜிட்டல் முறையில் கையொப்பம் பெறப்பட்டு அவை சிப்பில் பதிவு செய்யப்படும். அந்த சிப் தற்போதைய புத்தக வடிவ கடவுச்சீட்டுடன் பதிக்கப்படும். யாரேனும் சிப்பில் மாற்றம் செய்ய முற்பட்டால், அதைக் கண்டறிந்து உங்கள் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக அறிவிப்பு வரும் வகையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து 2 நிறுவனங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 2.2 கோடி மின்னணு கடவுச்சீட்டுகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.  மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சக நிறுவனத்தில் மின்னணு கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்கான பொருள்கள் கொள்முதல் செய்யப்படும் என்றார் ஜெய்சங்கர்.
 

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here