நாடோடிகள் 2 படத்தைத் தொடர்ந்து சசிகுமார் சுந்தரபாண்டியன் 2 படத்தில் நடிக்கக்கூடும் என்கின்றன தகவல்கள்.

2012இல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் வெளியானது. சசிகுமார், லட்சுமி மேனன், இனிகோ, சூரி, அப்புக்குட்டி நடித்திருந்தனர். கிராமத்து காதலும், நட்பும் துரோகமும் சமவிகிதத்தில் கலந்த சுந்தரபாண்டியன் வெற்றிப்படமாக அமைந்தது.

எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்து 2014இல் உதயநிதி, நயன்தாரா நடிப்பில் இயக்கிய இது கதிர்வேலன் காதல், 2017இல் விக்ரம் பிரபு நடிப்பில் இயக்கிய சத்திரியன் இரண்டும் தோல்விப் படங்களாக அமைந்தன. அதிலும் சத்திரியன் மெகா தோல்வி. சுந்தரபாண்டியனுக்குப் பிறகு வெற்றியே இல்லை என்ற நிலையில், சுந்தரபாண்டியன் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற எண்ணம் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு. சுந்தரபாண்டியன்போல் ஒரு வெற்றிப்படம் சசிகுமாருக்கும் அதற்குப் பிறகு அமையவில்லை. அதனால் இரண்டாம் பாகத்துக்கு அவரும் தயார். விரைவில் சுந்தரபாண்டியன் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here