இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்கயிருப்பதாக அபிமன்யுடு சக்சஸ்மீட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஷால்.

சமீபத்தில் வெளியான படங்களில் இரும்புத்திரை விஷாலுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அபிமன்யுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இந்தப் படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் சக்சஸ்மீட் வைசாக்கில் நடந்தது.

அப்போது பேசிய விஷால், விரைவில் அபிமன்யுடு 2 வை தொடங்குவேன் என்று அறிவித்தார். அபிமன்யுடுவை உருவாக்கிய அதே டீமை வைத்தே இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக கூறினார். தற்போது விஷால் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்