சியோமி நிறுவனம் தனது புதிய எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது எம்ஐ11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என சியோமி தெரிவித்து உள்ளது.
முன்னதாக இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சரவ்தேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை எம்ஐ11 அல்ட்ரா மாடலில் 6.4 இன்ச் E4 AMOLED குவாட் கர்வ்டு டாட் டிஸ்ப்ளே, பின்புறம் 1.1 இன்ச் AMOLED இரண்டாவது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி எம்ஐ11 அல்ட்ரா அம்சங்கள்
– 6.81 இன்ச் 3200×1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரல்லா கிளாஸ் விக்டஸ்
– 1.1 இன்ச் 126×294 பிக்சல் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
– அட்ரினோ 660 GPU
– 8 ஜிபி LPPDDR5 6400MHz ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
– 12 ஜிபி LPPDDR5 6400MHz ரேம், 256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி
– டூயல் சிம்
– எம்ஐயுஐ 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
– 50 எம்பி பிரைமரி கேமரா, 1.4μm, f/1.95, OIS, LED பிளாஷ்
– 48 எம்பி 128° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, OIS, f/4.1
– 20 எம்பி செல்பி கேமரா, 0.8μm, f/2.2
– இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி ஆடியோ
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 67 வாட் வயர்டு / வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங்
– 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்