ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒப்போ ரெனோ 5 சீரிசில் ரெனோ 5 5ஜி, ரெனோ 5 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 5 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற மாடல்களை கொண்டுள்ளது. 

இவற்றில் தற்சமயம் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடல் மட்டும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 ரெனோ 5 ப்ரோ 5ஜி
OPPO Reno5 Pro 5g Smartphone
OPPO Reno5 Pro 5g Smartphone

ரெனோ 5 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

– 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED வளைந்த டிஸ்ப்ளே

– மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர்

– அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

– 64 எம்பி பிரைமரி கேமரா

– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

– 2 எம்பி மேக்ரோ கேமரா

– 2 எம்பி டெப்த் கேமரா

– 32 எம்பி செல்பி கேமரா

– 4350 எம்ஏஹெச் பேட்டரி

– 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்

– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சீன  சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 38,200 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 42,700 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

TECH_NEWS :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here