டெல்லி கிரிக்கெட் சங்கம், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் பெயரை டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு சூட்ட முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட்டில் சாதனை புரிந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் சொந்த ஊர் மைதானங்களின் ஒரு பகுதிக்கு வீரர்களின் பெயரை சூட்டி கவுரவிப்பது வழக்கம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பலரது பெயர்கள் அப்படி சூட்டப் பட்டுள்ளன.

ஆனால், தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரரின் பெயரை, மைதானத்தின் ஒரு பகுதிக்கு வைப்பது அரிது. அந்த பெருமை இளம் வீரர் விராத் கோலிக்கு கிடைத்துள்ளது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவர் பெயரைச் சூட்ட, அம்மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அம்மாநில கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் ஷர்மா கூறும்போது, ‘’சர்வதேச கிரிக்கெட்டில் விராத் கோலியின் வியப்புக்குரிய பங்களிப்பு பெருமை அளிக்கிறது. அவரது சாதனைகளுக்காக அவரை கவுரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

ஏற்கன்வே டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில்டெல்லியின் முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பெடி, அமர்நாத் ஆகியோரின் பெயர்களில் அங்கு உள்ள இரண்டு பகுதிகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.