லண்டனில் நடைபெற்றூ வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் விம்பிள்டன் தரவரிசையில் 8ஆம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் – 12ஆம் நிலை வீரரான ஜோகோவிச் மோதிக்கொண்டனர்.

ஜோகோவிச் போட்டியின் ஆரம்பம் முதலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெடரர், இஸ்னெரை கடுமையாகப் போராடி வென்ற ஆண்டர்சன் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் இரண்டு செட்டுகளையும் 2-6, 2-6 என இழந்தார். 3-வது செட்டில் சற்று அதிரடியாகவே ஆண்டர்சன் ஆடினார். ஆனால் ‘டைபிரேக்கர்’ வரை சென்ற 3வது செட்டை ஜோகோவிச் எந்த சிரமுமின்றி கைப்பற்றினார்.

இறுதியில் ஜோகோவிச் 6-2, 6-2, 7-6 (3) என கைப்பற்றி தனது நான்காவது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

DiKhZ63WAAA3kTl

இதையும் படியுங்கள்

கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கிய பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கானோரை மீட்க வேண்டி இருக்கிறது. சுமார் 10 லட்சம் பேர் அரசு சார்பிலான நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆகும்....
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் இந்திய தொழிலதிபர் நிரவ் மோடி, இங்கிலாந்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13500 கோடி மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதை இன்டர்போல் உறுதி செய்துள்ளது.இந்தியாவைச் சேர்ந்த பிரபல வைர...
2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மக்கள் பாஜக அரசு மீது பெரும் கோபத்தோடு இருப்பதால் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில்பாஜக எம்.பி.க்களின் செயல்பாடுகளினால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. டெல்லி ஆட்சிக்கு தடைகளை ஏற்படுத்திவரும் பாஜக மீது...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்