(இன்று) செவ்வாய்க்கிழமை அன்று கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வரவிருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் ஒருவர் விமான நிலையத்திற்கு தனது பையில் தோட்டா எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கோவை விமான நிலையத்தில் சோதனையின் போது பாஜக மாநில
செயலாளர் ஜி.கே. செல்வகுமார் கொண்டுவந்த பையில் தோட்டா இருப்பதைக் கண்ட பாதுகாவலர் உடனே காவல்துறையினரை உஷார் படுத்தினார்.
விசாரித்தபோது செல்வகுமாரிடம் தோட்டா வைத்திருப்பதற்கான உரிமை இருப்பதாக தெரியவந்தது. தனது பைக்குள் அந்த தோட்டா தெரியாமல் விழுந்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
தனது ஓட்டுனரிடம் தோட்டாவை கொடுத்துவிட்ட பிறகு விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார்.

Courtesy : DNA