பொது முடக்கத்தின்போது ரத்தான விமான டிக்கெட்டுகளுக்கு ரீஃபண்ட் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விமான பயணிகள் நலச்சங்கம் சார்பாக வழக்குத் தொடரப்பட்டுள்து. 

இதனை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

முன்னதாக இதேபோன்ற வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான ரீஃபண்டை வழங்கும் வழிகளை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியது. 

உச்ச நீதிமன்றத்தில் தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கில், பொது முடக்கத்தில் ரத்தான விமான டிக்கெட்டுகளுக்கு முழு ரீஃபண்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

ரீஃபண்ட்முழுமையாக வழங்காத விமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here