இண்டிகோ விமான நிறுவனம், போயிங் விமானங்களை இயக்கவல்ல 100க்கும் மேற்பட்ட விமானிகளை தெரிவு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் விமானிகள், பல மாத சம்பள பாக்கியால், பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர். இந்தச்சூழலில், தனது சேவையை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கையை, அதிகளவில் உள்நாட்டு பயணிகள் விமானங்களை இயக்கும் இண்டிகோ தீவிரப்படுத்தியிருக்கிறது.

நாளொன்றுக்கு, ஆயிரத்து 300 விமான சேவைகளை இண்டிகோ வழங்குகிறது. 3 ஆயிரத்திற்கும் அதிகமான விமானிகள் பணியாற்றி வரும் நிலையில், போயிங் விமானங்களை இயக்க, அனுபவம் வாய்ந்த 100க்கும் அதிகமான விமானிகளை தேர்வு செய்யும் பணிகளை இண்டிகோ தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன பணியிலிருந்து விலகும் விமானிகளுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ள இண்டிகோ விமான நிறுவனம், ஒவ்வொரு விமானிக்கும், தலா 9 லட்ச ரூபாயை அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கவும் முடிவு செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here