நடுவானில் விமான பயணத்தின்போது பிறந்த குழந்தைக்கு, இலவசமாக வாழ்நாள் முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பறப்பதற்கான பாஸ் வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஜெட் ஏர்வேஸ்.

ஞாயிற்றுக்கிழமையன்று, சவுதி அரேபியாவின் தமாம் நகரிலிருந்து, கேரள மாநிலம் கொச்சி நோக்கி, ஜெட் ஏர்வேஸ் போயிங் 737 விமானம் 162 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானத்தில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் பயணம் செய்திருக்கிறார். விமானம், 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அந்தக் கர்ப்பிணி பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து, விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த வில்சன் என்னும் பெண் செவிலியர், விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் பிரசவம் பார்த்தார். அதில் அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து விமானம், அவசரமாக மும்பையில் தரையிறங்கியது. அங்கு தாயும், சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்தது.

நடுவானில் பிறந்த இக்குழந்தைக்கு, பரிசாக வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்க, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பாஸ் வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள் : வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் – ட்விட்டரில் தன்னை விமர்சித்த கஸ்தூரியை சந்தித்த ரஜினி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்