விமல் உருகி கேட்டும் மனம் இளகாத திரையரங்குகள்

0
436
Vimal

என்னுடைய மன்னர் வகையறா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதற்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு தர வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியிருந்தார் விமல். ஆனால், வியாபாரத்தின் முன்னால் விமலின் உருக்கம் விலை போகவில்லை.

பண்டிகை தினத்தில் படத்தை வெளியிட்டால் சாதாரண நாள்களைவிட 50 சதவீத அதிக வசூலை பெறலாம் என்பதால் தயாரிப்பாளர்கள் பண்டிகை தினங்களை குறி வைப்பது இயல்பானது. விமல் தயாரித்து நடித்திருக்கும் தனது மன்னர் வகையறா படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார். மன்னர் வகையறா அவரது 25 வது படம். பூபதி பாண்டியன் இயக்கம். சூர்யா, விக்ரம் படங்கள் வெளியாவதால் மன்னர் வகையறாவுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, என்னுடைய படத்துக்கு ஆதரவு தாருங்கள் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினார். பொங்கலுக்கு என்னுடைய மன்னர் வகையறாவை வெளியிட்டு உதவுங்கள் என்பது கடிதத்தின் சாரம். ஆனால், பொங்கலுக்கு விமல் படத்தை வெளியிட பெரும்பாலானோர் முன்வரவில்லை. படம் தள்ளிப் போயுள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே திரையரங்குக்கு கூட்டம்வரும் எனும் நிலையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் இந்த புறக்கணிப்பு எதிர்பார்க்கக் கூடியதே.

இதையும் படியுங்கள்: H1B விசா ஏற்படுத்திய தாக்கம்; லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்த இந்திய ஐடி நிறுவனங்கள் இவை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்