களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் எடுத்து வருகிறார். தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சியை விமல், ஓவியாவை வைத்து எடுத்துள்ளனர்.

களவாணி படத்தின் வெற்றியில் கணிசமான பங்கு காமெடிக் காட்சிகளுக்கு செல்ல வேண்டும். பஞ்சாயத்து என்ற கதாபாத்திரத்தில் வந்த கஞ்சா கருப்பை விமல், சூரி டீம் ஓட்டுகிற காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்தது. களவாணியில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அவர் இல்லை. அவர் என்றால் சூரி.

ஆம், சூரிக்குப் பதில் ஆர்ஜே விக்னேஷை விமலின் நண்பராக நடிக்க வைத்திருக்கிறார் சற்குணம். சூரியின் வெற்றிடத்தை விக்னேஷ் நிரப்புவாரா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்