மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கிளப் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மீது, நேற்று இரவு பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் சுவர் இடிந்தது. கார் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர், ஆகாஷ் முகோபாத்யாய் என்பது தெரிய வந்தது. இவர் பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் ஆவார். 

ஆகாஷ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மிகவும் அபாயகரமான முறையில் காரை ஆகாஷ் ஓட்டி வந்ததாக விபத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,  ஆகாஷ் முகோபாத்யாயிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

ரூபா கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மகனை தான் மிகவும் நேசிப்பதாகவும் எனினும் சட்டம் அதன் கடமையை செய்யும். இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here