ஈரான்  தலைநகர் டெஹ்ரான் அருகே நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான போயிங் அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இரான் அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனி விமானநிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன் விமானம் கிளம்பியயே உடனே இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 167 பயணிகளும் ஒன்பது விமானப் பணியாளர்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய விமானப் போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த இரானுக்கு உரிமை உண்டு.

"விமானத்தின் கருப்பு பெட்டியை தரமாட்டோம்" - இரான் அறிவிப்பு

இதுபோன்ற விசாரணைகளில் அந்த விமானத்தை தயாரித்த நிறுவனமும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் திறன் பெற்ற சில நாடுகளும் ஈடுபடுவது வழக்கமானது.

இந்நிலையில், “விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நாங்கள் அதன் உற்பத்தியாளரிடமோ அல்லது அமெரிக்கர்களிடமோ கொடுக்கமாட்டோம்” என்று ஈரானின் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி அபெட்ஸாதே தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“இந்த விமான விபத்து குறித்து ஈரானின் விமானப்போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்யும். இதில் உக்ரேனிய அதிகாரிகளும் பங்கேற்கலாம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Screen-Shot-2020-01-09-at-9-17-17-AM

கனடாவை சேர்ந்த 63 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், “தேவையான வழிகளில் உதவுவதற்கு தயாராக உள்ளோம். இந்த விசாரணையில் நாங்களும் பங்கெடுப்போம் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here