anchor

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் தனது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைப் பிரேகிங் செய்தியாக வாசித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.

கவுர் (28), சத்தீஸ்கரில் மிகவும் பிரபலமான ஐபிசி-24 தொலைக்காட்சியில் ஒன்பது ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு பிலாயைச் சேர்ந்த ஹர்சாத் கவடே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ராய்பூரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை, வழக்கம்போல் கவுர் நேரடி செய்தி வாசிப்பில் இருந்தார். அப்போது நிருபர் ஒருவர் தொலைபேசியில் மகாசமுந்த் மாவட்டத்தில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், அதில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இறந்தவர்கள் குறித்தத் தகவலை அந்த நிருபர் கூறவில்லை. இருந்தாலும் அவர் கூறிய தகவல்களை வைத்து கவுர், விபத்தில் உயிரிழந்தது தனது கணவராக இருக்கலாம் என உணர்ந்தார். ஏனென்றால் கவுரின் கணவரும், அவரது நண்பர்கள் நான்கு பேரும் அதே வழியில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனத்தில் பயணம் செய்துள்ளார்கள். இதை உணர்ந்த கவுர் மிகவும் உடைந்து போனார். இருந்தாலும் செய்தி நேரம் முடிந்த பின்னரே அங்கிருந்து வெளியேறினார்.

இது குறித்து கவுருடன் பணியாற்றும் சகப்பணியாளர் ஒருவர், “அவர் மிகவும் துணிச்சலான பெண். அவரை நினைத்து நாங்கள் பெருமையடைகிறோம். ஆனால் இன்று எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்” என கூறியுள்ளார்.

தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ஒருவர், “அது அவர் கணவரின் வாகனம்தான் என்று அவர் உணர்ந்து கொண்டார். அவர் செய்தியை வாசித்து வெளியே வந்த உடனே அவரது உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது. அவர் அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அவரது கணவர் இறந்துவிட்டார் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எங்களுக்கு அந்தளவிற்கு தைரியமில்லை” என கூறினார்.

நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இதையும் படியுங்கள் : ஜெயலலிதாவின் மகன் எனக் கூறிய நபர் கைது

இதையும் படியுங்கள் : 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; வீடியோ

2 கருத்துகள்

ஒரு பதிலை விடவும்