தேவையான பொருட்கள் :

மேல் மாவு செய்ய:

கொழுக்கட்டை மாவு – ஒரு கப்,
தண்ணீர் – ஒன்றே கால் கப்,
உப்பு சிட்டிகை, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

பூரணம் செய்ய :

கறுப்பு எள் – 50 கிராம்,
வெல்லம் – 50 கிராம்,

ஏலக்காய் – 2.
செய்முறை :

தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும்.

ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

எள்ளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து களையவும். பிறகு தட்டில் பரவலாக கொட்டி வெயிலில் காய விடவும்.

வெறும் வாணலியில் காய்ந்த எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம்.

மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

சூப்பரான எள் பூரண கொழுக்கட்டை ரெடி.

இதையும் படியுங்கள்

ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தை வென்று தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது. https://twitter.com/ICC/status/1107531455809372161 டெஹ்ராடுனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 85 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 11வது வீரர் ஆட்டமிழக்காமல் 75...
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 12வது ஐ.பி.எல். டி20 போட்டிகள் வருகிற 23 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதற்கான இரண்டு வார காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் வருகிற 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று(புதன்கிழமை)பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 27 ரன்கள்...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்