செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று முக்கியப் படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுவரும் தொடர் விடுமுறையை அறுவடை செய்ய பலரும் ஆவலாக உள்ளனர். சிவகார்த்தியேனின் சீமராஜா செப்டம்பர் 13 வெளிவரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் பல மாதங்கள் முன்பே கர்ச்சீஃப் போட்டது.

கன்னட இயக்குநர் பவன் குமார் தனது கன்னடப் படம் யு டர்னை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கில் அதே பெயரில் இயக்கியுள்ளார். அந்தப் படம் – யு டர்ன் – செப்டம்பர் 13 வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் செப்டம்பர் 13 யு டர்ன் வெளியாக அனுமதி அளித்துள்ளது. சீமராஜாவிலும் சமந்தாவே நாயகி. அந்தவகையில் செப்டம்பர் 13 சமந்தாவின் இரு படங்கள் திரைக்கு வருகின்றன.

கார்த்திக் நரேனின் நரகாசூரன் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றது தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. படவெளியீட்டை தயாரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. செப்டம்பர் 13 விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் ஆறு அல்லது ஏழு 96 படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக செப்டம்பர் 13 சீமராஜா, யு டர்ன், நரகாசூரன் ஆகியவை வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்