விநாயகர் சதுர்த்தி:
விநாயகர்  சதுர்த்தி  ஆவணி  மாதம்  வளர்பிறை  சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகின்றது.  இந்த  தினத்தில்தான்  
பார்வதி தேவி ,  விநாயகரை உருவாக்கிய  நாளாக கருத்தப்படுகிறது. 

இந்தாண்டு கொண்டாட்டம்:
2019ஆம் ஆண்டு செம்படம்பர் 02ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட  உள்ளது. 

அன்றைய  தினம்  காலை6.15 முதல் 7.15 வரையிலும் 
மாலை4.45 முதல் 5.45  வரை  நல்ல  நேரம். 

இந்த நேரத்தில் பூஜை செய்வது மிகவும் சிறந்ததாக பார்க்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல், நாம் பொதுவாக வீட்டில் விளக்கேற்றி வழிபடக்கூடிய அந்திசாயும் நேரத்திலும் நாம் விநாயகர் பூஜை செய்ய சரியான நேரமாகும்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு மேல் களிமண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். விநாயகர் படமும் வைத்துக்கொள்ளலாம்.  வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.

விநாயகரின் திரு மேனியில் எந்தக் குறையும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும். விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை வீட்டில் எத்தனை நாட்கள் வைத்து இருக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து பூஜை செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். அன்று மாலையில் சந்திரனை பார்த்தல் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.