விண்ணப்பம் கூட பூர்த்தி செய்யாத வேதாந்தா பல்கலைக்கழகத்துக்கு சலுகைக் காட்டிய பாஜக அரசு

0
244

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது .

இந்நிலையில் வேதாந்தா குழுமத்தால் முன்மொழியப்பட்ட வேதாந்தா பல்கலைக்கழகம் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற, விண்ணப்பிப்பதற்கான காலவரையறையை ஒரு மாதம் நீட்டித்திருக்கிறது மத்திய அரசு .

வேதாந்தா குழுமத்தால் ஒடிஷாவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் வேதாந்தா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு நீட்டிப்பாக ஒரு மாதம் காலம் மத்திய அரசு கொடுத்துள்ளது. உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக, இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, மத்திய அரசு இச்சலுகையை வேதாந்தா குழுமத்துக்கு வழங்கியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெறும் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்கும்.

ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னும் பேப்பர் அளவில் கூட தொடங்கப்படாத ஒரு நிறுவனமாகும். கூகுளில் தேடிப்பார்த்தால் கூட இந்த பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத்தர பல்கலைக்கழகம் தகுதி வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது .

இன்னும் ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு எழுந்த எதிர்ப்புகள் இன்னும் ஓயாத பட்சத்தில் மத்திய அரசு இந்தியாவில் கல்வித் துறையில் நுழைய முயற்சிக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு உதவுவதில் தாராளமாக இருக்கிறது.

இன்னும் விண்ணப்ப படிவமே நிரப்பப்படாமல் இருக்கிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு அதிகாரிகள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளனர்.

வேதாந்தா குழுமத்தால் முன்மொழியப்பட்ட வேதாந்த பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி காலக்கெடு நீட்டிக்கப்பட்டது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு (உயர்கல்வி) துறையின் அதிகாரி ஆர்.சுப்ரமணியன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் உறுதிபடுத்தினார்.

ஜியோ இன்ஸ்டிடியூட் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பிவிட்டது என்றும் வேதாந்தா பல்கலைக்கழகம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய காலக்கெடுவை நீட்டித்து கேட்டது என்றும் ஆர்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

க்ரீன்ஃபீல்ட் பிரிவில் ஜியோ இன்ஸ்டிடியூட் ஏர்டெல் நிறுவனம் விண்ணப்பித்திருந்த பாரதி பல்கலைக்கழகத்தையும், வேதாந்தா பல்கலைக்கழகத்தையும் முந்தியது .

இந்தப் பிரிவில் ஆர்பிஐயின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஆலோசகராக இருக்கும் KREA பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ், டெல்லி இந்துஸ் டெக் பல்கலைக்கழகம், பெங்களூர் ஆச்சார்யா பல்கலைக்கழகம் ஆகியவை போட்டியிட்டன.

திங்கள்கிழமை (ஜூலை 9)பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி), மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி மும்பை) , டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி டெல்லி) ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைக்கழகங்களையும், தலைச்சிறந்த 6 நிறுவனங்களாக (Institute of Eminence) முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு முதற்கட்டமாக தேர்வு செய்தது.

தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் இடம் பெற விண்ணப்பிப்பது பற்றி 2016-2017 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 13 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு விண்ணப்பிக்க 90 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஒருமாத் காலம் நீட்டிப்பு பிற்பாடு கொடுக்கப்பட்டது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் அதிகாரிகள் கூறினர்.

ரிலையன்ஸ் பவுண்டேசனால் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகம் ரூ9500 கோடி ஆரம்ப முதலீடில் தொடங்கப்பட உள்ளதாகவும், உலகளவில் தரம் வாய்ந்த 50 பல்கலைக்கழகங்களுடன் நல்லுறவும், சிறந்த வல்லுனர்களுடன் தொடர்பும் , முன்னணி கல்வியாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களை கொண்டதாகவும் இருக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்த ஆவணங்கள் தெரிவிக்கிறது.

Courtesy : New Indian Express

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்