விட்டதைப் பிடிக்க காங்கிரஸில் இணைந்த சூப்பர் ஸ்டாரினி

0
69
Vijayashanti

முன்னாள் சூப்பர் ஸ்டாரினி விஜயசாந்தி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

இன்றைய அனுஷ்கா, நயன்தாராவுக்கெல்லாம் முன்னோடி விஜயசாந்தி. நாயகி மையப்படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக கலக்கியவர். அவரது ஆக்ஷன் வேடங்களை இன்னும் எந்த நடிகைகளும் நெருங்கவில்லை.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த விஜயசாந்தியின் ரோல் மாடல் ஜெயலலிதா. ஆந்திராவின் ஜெயலலிதாவாக வேண்டும் என்ற விஜயசாந்தியின் கனவுக்கு அங்குள்ளவர்கள் ஒத்துழைக்கவில்லை. காங்கிரஸ், பாஜக என்று கட்சிகள் மாறியவர், தனித்தெலுங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டினார். தனித்தெலுங்கானம் அமைந்த பிறகு அதற்கு போராடிய விஜயசாந்திக்கு அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லை. தெலுங்கானாவின் ஆளும்கட்சியை எதிர்க்க இப்போது ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா என்று பிரிந்துகிடக்கும் அதிமுகவில் விஜயசாந்தியின் ஆதரவு சசிகலாவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: வரலாம், வா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்