விடைபெற்றார் ஹர்பஜன் சிங்

Notably, Harbhajan did not take part in the 2020 edition of the tournament, citing personal reasons.

0
182

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11 ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

சென்னை சூப்பா் கிங்ஸைப் பொறுத்தவரை கடந்த ஏலத்துக்குப் பிறகு அணியின் வசம் ரூ. 15 லட்சமே உள்ளதால், அதிக ஊதியம் உள்ளசில வீரா்களை விடுவித்து தனது நிதிநிலையை அதிகரித்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டு மோசமாக விளையாடிய சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதில் ஹர்பஜன் சிங், முரளி விஜய், பியூஷ் சாவ்லா, சுரேஷ் ரெய்னா, கரன் சர்மா, இம்ரான் தாஹிர், ஜோஷ் ஹேசல்வுட், கேதர் ஜாதவ் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி தக்க வைத்துக்கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் ” சிஎஸ்கே அணியுடனான என்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. சிஎஸ்கே அணிக்காக விளையாடியது மிகச் சிறந்த அனுபவம். இந்த அணியுடன் எனக்கு அழகான நினைவுகள் இருக்கிறது, நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். இனி வரும் காலங்களில் பழைய நினைவுகளை எண்ணி மகிழ்வேன். மகிழ்ச்சியான 2 ஆண்டுகளை கொடுத்த சிஎஸ்கே நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

என்றைக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆரம்பித்தாரோ அன்று முதல் தமிழ் மேலும், திருவள்ளுவர் மீதும் காதல் கொண்டு தமிழில் டிவீட் போடுவது என அமர்க்களப்படுத்தி வந்த சிங், இனிமேலும் அதைத் தொர்ந்து செய்வாரா?. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here