விடுவிக்கப்பட்ட மலிங்கா: மும்பை இந்தியன்ஸ் விளக்கம்

On his decision, Malinga said, “After discussing with family, I think now is the right time to retire from all franchise cricket.

0
134

இலங்கை அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் நேற்று(புதன்கிழமை) லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்தது. இது அனைவருக்கும் சற்று ஆச்சர்யத்தை அளித்தது.

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008 முதல் 12 வருடங்களாக மும்பை அணிக்காக விளையாடியவர் மலிங்கா. ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் மலிங்கா தான்.

122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 13 ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தது சிறந்த பந்து வீச்சாகும். எகானமி – 7.14. 

இந்நிலையில் மலிங்கா விடுவிக்கப்படுவதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

லீக் போட்டிகளில் இருந்து மலிங்கா விலகியுள்ளார். இந்த மாதத் தொடக்கத்தில் மலிங்கா இத்தகவலைத் தெரிவித்தார். இதனால் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் இருந்து அவர் விலகினார். மலிங்காவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். இதனால் தான் மும்பை அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களின் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மலிங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத்தினருடன்  கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளேன். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் என்னால் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது. எனவே தான் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். 12 வருடங்களாக எனக்கு ஆதரவு அளித்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here