பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (76), புதன்கிழமை அதிகாலை காலமானார். லண்டன் கேம்பிரிட்ஜ் இல்லத்தில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிள்ளைகள் ராபர்ட், லூஸி மற்றும் டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும் என்றும், அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்த்ள்ளனர். அவரது மறைவு தங்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

* 1942ஆம் ஆண்டு ஜன.8ஆம் தேதி ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்தார். இவரது தந்தை உயிரியல் துறையில் ஆராய்ச்சியாளாக இருந்தார்.

* ஸ்டீபன் ஹாக்கிங், 1963ஆம் ஆண்டு நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார்.

* உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.

* அண்டவியல் (cosmology), குவாண்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள்.

* ஏ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time), கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியவர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்