விஜய் 63 -இல் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

0
117

இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் விஜய்யின் 63 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்யின் 63 வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தயாராகும் இந்தப் படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். நயன்தாரா, கதிர், யோகி பாபு முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃபையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் வில்லனாக நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்க, ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்து வருகிறது. சென்னையில் இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here