விஜய் 62 படத்தின் சண்டைக்காட்சி லீக் – முருகதாஸ் அதிர்ச்சி

0
355
Vijay

தொழில்நுட்பம் சிலநேரம் தொல்லைநுட்பமாகவும் மாறும். எத்தனை கதவுகள் போட்டு அடைத்தாலும் ரகசியத்தை காப்பாற்ற முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது தொழில்நுட்பம்.

ரஜினியின் காலா படத்தின் சண்டைக்காட்சி நேற்று முன்தினம் இணையத்தில் பதிவேற்றப்பட்டது. எடிட்டிங்கின் போது யாரோ இதனை எடுத்து பதிவேற்றியுள்ளனர். இந்நிலையில் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிவரும் படத்தின் சண்டைக் காட்சி வீடியோவும் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் அரங்கம் அமைத்து விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடைத்தெருவில் பைக்கில் வந்து பெண்ணிடம் செயின் பறிக்கும் இரண்டு பேரை விஜய் புரட்டியெடுப்பது போல் காட்சி. இதைத்தான் யாரோ செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.

படப்பிடிப்புதளத்தில் செல்போன் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்த பிறகும் காட்சி லீக்காகியிருப்பது முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்