விஜய் 62 அப்டேட்ஸ் – வில்லனாக பிரபல அரசியல்வாதி நடிக்கிறார்

0
290
Vijay

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் பிரபல அரசியல்வாதி வில்லனாக நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தாவில் நடந்தது. இப்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. பச்சையப்பா கல்லூரியில் படப்பிடிப்பு நடந்த போது பிரச்சனை எழுந்ததால் இப்போது தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள பள்ளியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ், யோகி பாபு நடிக்கும் இந்தப் படத்தில் ராதாரவியுடன் பிரபல அரசியல்வாதி பழ.கருப்பையா வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு தமிழ் ஸ்டண்ட் கலைஞர்களின் சண்டை போரடித்துவிட்டது போலிருக்கிறது. இந்தமுறை தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ராம் – லக்ஷ்மண் என்ற இரட்டையர்கள் சண்டைக் காட்சி அமைத்து வருகிறார்கள். முக்கியமான விஷயம், இந்தப் படத்தில் நடிக்க வரலட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வரும் தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இதையும் படியுங்கள்: 25 வருடங்களாக எங்கிருந்தீர்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி?’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்