விஜய் 61 படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியில் திடீர் மாற்றம்

0
1031
Vijay

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் இப்போது தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் என பெயர் மாறியிருக்கிறது. இவர்களின் 100 வது படத்தை விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வருகிறார். விஜய்யின் 61 வது படம் என்பதால் விஜய் 61 என்று இந்தப் படத்தை ரசிகர்கள் அழைக்கின்றனர்.

ஜுன் 22 விஜய்யின் 43 வது பிறந்தநாளில் இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பில் அறிவித்திருந்தனர். அதில் இப்போது மாற்றம். விஜய்யின் பிறந்த நாளில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியாகப் போவதில்லை. ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பி. எப்படி?

ஜுன் 22 க்கு பதில் ஜுன் 21 மாலை ஆறு மணிக்கு படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது தெரியவில்லை.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

இதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்

இதையும் படியுங்கள்: பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளரின் துவேஷம் இதுதான்: படியுங்கள்

இதையும் படியுங்கள்: இன்று அகதிகளின் தினம்

இதையும் படியுங்கள்: அஞ்சு ரூபா கொடுங்க; இப்போதே செய்யுங்க

இதையும் படியுங்கள்: #MTCBus: இந்தப் பேருந்தின் லட்சணத்தைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்