விஜய் ரசிகராக நடிக்கும் ஜீ.வி.பிரகாஷ்

0
246

விஜய்யின் தீவிர ரசிகராக சர்வம் தாள மயம் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

சினிமா நட்சத்திரங்களின் ரசிகராக திரையில் நடிகர்கள் தோன்றுவது புதிதல்ல. நடிகர் விஜய்யே எம்ஜிஆர் ரசிகராக நடித்திருக்கிறார். ஒருகாலத்தில் சிம்பு நடிக்கும் படங்களில் அஜித்தின் புகழ்பாடும் காட்சிகள், வசனங்கள் தவறாமல் இடம்பெறும். ராஜீவ் மேனன் இயக்கத்தில் ரஹ்மான் இசையமைத்துவரும் சர்வம் தாள மயம் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பீட்டர் என்ற வேடத்தில் நடிக்கிறார். விஜய்யின் மெர்சல் வெளியானதையொட்டி, பேனர் வைத்து தியேட்டர் முன்பு ஜீ.வி.பிரகாஷ் ஆடிப்பாடுவது போல் ஒரு காட்சியை எடுத்துள்ளனர்.

ஜீ.வி.பிரகாஷ் நிஜத்திலும் விஜய் ரசிகர்கள். பிரபல வார இதழ் தனுஷை மக்களை கவர்ந்த ஹீரோவாக தேர்வு செய்த போது, விஜய்யைதான் முதலில் தேர்வு செய்தார்கள், விஜய் பேட்டி தராததால் அவரை மாற்றிவிட்டனர் என்று பகிரங்கமாக குரல் கொடுத்தவர் ஜீ.வி.பிரகாஷ்.

சர்வம் தாள மயத்தில் ஜீ.வி. நடித்திருக்க மாட்டார்… வாழ்ந்திருப்பார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இதையும் படியுங்கள்: அருண்ஜேட்லியின் மகள் அலுவலகத்தில் சோதனை நடத்தாது ஏன்?’

இதையும் படியுங்கள்: விவசாயி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்