விஜய், முருகதாஸ் படத்துக்கு வசனம் எழுதும் ஜெயமோகன்

0
535

தமிழின் முன்னணி எழுத்தாளரான ஜெயமோகன் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.

கஸ்தூரிமான் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஜெயமோகன் சிந்துசமவெளி, அங்காடித்தெரு, நான் கடவுள், கடல் உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதினார். தற்போது ஏமாலி, 2.0 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கும் அவர் வசனம் எழுதியிருப்பது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முருகதாஸ் – விஜய் இணைகின்றனர். சில தினங்கள் முன்பு இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சென்னை இசிஆர் பகுதியில் முருகதாஸ் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகி.

விஜய்யின் 62 வது படமான இதற்கும் ஜெயமோகனே வசனம் எழுதியுள்ளார். விஜய், முருகதாஸ் இருவருடன் ஜெயமோகன் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

இதையும் படியுங்கள்: லோயாவின் மரணம் இயற்கையானது-டி.ஒய்.சி’: அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்