வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

அதற்கு அருண் ஜெட்லி தான் அவருடன் பேசவில்லை என்றும் அது முறையான சந்திப்பு அல்ல என்றும் கடும் மறுப்புத் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி , மல்லையாவுடன் தான் சில வார்த்தைகள் மட்டுமே பேசினேன் என்ற ஜெட்லியின் விளக்கம் முற்றிலும் பொய்யானது என்று கூறினார்.

குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டன் செல்லப்போவதாக மத்திய நிதியமைச்சரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சரோ இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்துறை, போலீஸார் என யாரிடமும் தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் இவ்விருவருக்கும் இடையே ஏதேனும் ஒப்பந்தம் உள்ளது என்றுதான் அர்த்தம். விஜய் மல்லையா லண்டன் தப்பிச்செல்ல அருண் ஜேட்லி மறைமுகமாக உதவி செய்துள்ளார்.

ராகுல் காந்தி மல்லையாவை ஏன் ஜெட்லி தப்ப விட்டார்? அல்லது அது பிரதமரின் ஆணையின்படி நடந்ததா? இதில் என்ன நடந்தது என்னும் உண்மையை தெரிவித்துவிட்டு மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும். அதுபோல மல்லையா மீதான கைது நடவடிக்கையை எதற்காக எச்சரிக்கை நடவடிக்கையாக மாற்ற வேண்டும். இவையெல்லாம் சிபிஐ-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவரால் தான் செய்ய முடியும்.

இந்த அரசானது விஜய் மல்லையா, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் என ஊழலில் மிதக்கிறது. மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிக்க நிதியமைச்சர் தான் வழிகாட்டினார். தலைமறைவான ஒருவர் நிதியமைச்சரை தான் வெளிநாடு தப்பிச்செல்லும் முன் பார்த்ததாகக் கூறுகிறார், இதனை ஏன் சிபிஐயிடம் அவர் தெரிவிக்கவில்லை. அல்லது அமலாக்கப்பிரிவினருக்குத் தகவல் அளிக்கவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

( இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்