இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’.  இவர்கள் இருவரும் இணைந்த ‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்நிலையில், ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘பிகில்’ படத்திற்கு   ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நயன்தாரா,  நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான சிங்கப்பெண்ணே பாடல் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இப்படத்தில் ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். வெறித்தனம் எனத்தொடங்கும் பாடலை விஜய் பாடப்போவதாக படக்குழு அப்டேட் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டது. 

இந்நிலையில் வெறித்தனம் பாடல் குறித்து ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய  ஏ.ஆர்.ரகுமான், ”விஜய் நன்றாக பாடியுள்ளார். அவரது குரல் பாடலுக்கு நிறைய வித்தியாசங்களை கொடுத்துள்ளது. பிகில் இசை குறித்து வேறு எதுவும் என்னால் கூற முடியாது. சஸ்பென்ஸ்” என கூறியுள்ளார். 

இதனை அடுத்து விஜயின் குரலில் உருவாகியுள்ள பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)