இளைய தளபதி விஜய்யாக இருந்தவர் இப்போது இளைய என்பதை டெலிட் செய்து தளபதியாக பரிமாணம் அடைந்திருக்கிறார். திமுகவினருக்கு விஜய்யின் இந்த பரிமாண வளர்ச்சியில் அவ்வளவாக விருப்பமில்லை. அவர்களது தலைவர் மு.க.ஸ்டாலின்தான் அவர்கள் அறிந்த ஒரே தளபதி.

உங்க தலைவரும் தளபதி, விஜய்யும் தளபதி, ஒரிஜினல் தளபதி யாரு, சொல்லுங்க என்று திமுக உடன்பிறப்புகளை எதிரிகள் அவ்வப்போது கலாய்ப்பது உண்டு. இணையத்தில் உதயநிதி ஸ்டாலினிடமும் இப்படியொரு கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.

“விஜயயை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர்..பார்த்து செய்ங்க சார்!” என்று அந்த ரசிகரின் கேள்வியே உதயநிதியை மாட்டிவிடும் தோரணையில் இருந்தது. அதற்கு உதயநிதி புத்திசாலித்தனமாக ஒரு பதிலை தந்திருக்கிறார்.

“ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்!” என கழுவுற மீனில் நழுவுற மீனாக ஒரு பதிலை தந்திருக்கிறார். திரையுலகில் மட்டும் விஜய் தளபதி புறவுலகில் தளபதி மு.க.ஸ்டாலின்.

விஜய் ரசிகர்கள் இதனை ஒத்துக் கொள்வார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here